Description
கலைஞரின் நகைச்சுவை நயம்
2-ம் பாகம்
கவிஞர் தெய்வச்சிலை
வெளியேறியது வெளியேற்றத்தான்
சட்டப்பேரவை நிகழ்ச்சி
தமிழக சட்டப் பேரவையில், 30.11.07 அன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கலைஞர் அவர்கள் வெகு அவசரமாக அவையி-ருந்து வெளியே சென்றார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயக்குமார், முதலமைச்சர் வெளிநடப்பு செய்கிறாரா என்று அமர்ந்த நிலையிலே ஒ-பெருக்கி இல்லாமலே கிண்டலாகக் கேட்டார்.
உடனே அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினரின் அநாகரீகச் செயல்பாட்டை வன்மையாகவே கண்டித்துப் பேசினார். இதனால் சபையில் விவாதமும் அதனால் அமளியும் ஏற்பட்டது.
சிறிது நேரத்திலே கலைஞர் அவர்கள் அவைக்குள் வந்து, நடந்தவற்றை அறிந்து,
“நான் பேரவையில் மரியாதைக் குறைவோடு நடந்து கொண்டதில்லை. முன் அமைச்சர் ஓ.பி. பேசும்போது நான் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் வெளியே சென்றது யாரையும் அவமதிப்பதற்காகச் செல்லவில்லை. வெளியே அனுப்புவதற்காகத்தான் வெளியே சென்றேன். இப்போது புரிகிறதா நான் ஏன் அவசரமாக வெளியேறச் சென்றேன் என்று” எனச் சொல்வதும் பேரவை சிரிப்பலையில் மூழ்கியது. “வெளிநடப்பு” என்ற போர்வையில் எதிர்க்கட்சி உறுப்பினர் விவாதத்தில் இறங்கியதை வைத்து, வெளியேற்றத்தான் (சிறுநீர் கழிப்பறை) என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தெரிவித்து கலைஞரின் சொற்திறனைப் பாராட்டும் வகையில் ஓ.ப.அவர்களே புன்னகை பூத்தார்.
தமிழில்தான்…
இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண மைய அரசுக்குக் கெடுவிதித்து, தி.மு.க. எம்.பி.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக முதல்வர் கலைஞரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.யான தயாநிதிமாறன் தனது ராஜினாமா கடிதத்தை 09.10.08 அன்று முதல்வரிடம் கொடுத்தார். இதன்பின் நிருபர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி.
கேள்வி: தயாநிதி உங்களிடம் எப்படிப் பேசினார்?
கலைஞர்: தமிழில்தான் பேசினார்.
கேள்வி: இந்தச் சந்திப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?
கலைஞர்: எல்லா சந்திப்பும் ஒன்றுதான். எந்த நிந்திப்பும் கிடையாது.
(எதையோ மெல்ல நினைத்த நிருபர்களுக்கு, கலைஞரின் சமயோசித பதிலால் சிரித்தபடியே விடைபெற்றுச் சென்றனர்).
போ-ச் சாமியார்
கலைஞர் அவர்கள், “ஒருமுறை போ-ச் சாமியார்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டதே என என்னிடம் இன்று சந்தித்த நிருபர்கள் கேட்டார்கள். அதற்கான பதிலை இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
“தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் ஒருமுறை வடநாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்கள். ஒருநாள் காசி நகரில் தங்கினார்கள். மறுநாள் காலை பெரியார் அவர்கள், “இங்குள்ள ஆற்றின் பக்கம் சென்று வரலாம்” என அண்ணாவை அழைத்தார்கள்.
பெரியார், குளிருக்கு ஏற்ற கோர்ட் அணிந்து மேலே சால்வையைப் போர்த்தியபடியும், உட-ல் மெல்-ய சட்டையோடு அண்ணாவும் கரையோரமாக சென்றனர். அங்கே குளிரில் அண்ணாவின் உடல் நடுங்கியது. தன் இரு கைகளையும் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு குளிரால் நடுங்கியபடி தந்தையைப் பின் தொடர்ந்து நடந்து சென்றார்.
எதிரே வந்து கொண்டிருந்த மக்கள் இருவரையும் பார்த்துவிட்டு, முன்னால் போகும் தாடி வைத்தவர் பெரிய குரு போ-ருக்கிறது என நினைத்து விழுந்து விழுந்து கும்பிடத் தொடங்கினார்கள். குரு பின்னால் நடுங்கியபடி சென்ற அண்ணாவைப் பார்த்து எவ்வளவு பணிவான சிஷ்யன் எப்படி கையைக் கட்டிக் கொண்டு குருவுக்குப் பயந்து நடுங்கியபடியே பயபக்தியுடன் போகின்றான் பாருங்கள். இப்படியல்லவா இருக்கவேண்டும் குரு-சிஷ்யன் உறவு என்றார்கள்.
அந்தக் குளிரிலும் அண்ணாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை என முடித்தார் கலைஞர்.
(காலம் இடத்திற்கேற்றவாறு நகைச்சுவை ததும்ப பேசிய தலைவரின் உரையைக் கேட்டு வந்திருந்த கூட்டம் பெரும் சிரிப்பில் மூழ்கித் திளைத்தனராம்).
Reviews
There are no reviews yet.