கலைஞரின் நகைச்சுவை நயம் 5 | Kalignarin Nagaichuvai nayam 5

110.00

Category:

Description

கலைஞரின் நகைச்சுவை நயம்
பாகம்-5

என்னுரை-முன்னுரை
1862-ம் ஆண்டு செப்டம்பர் 22 உள்நாட்டுப் போராட்டத்தில் அமெரிக்க அதிபர் -ங்கன் ஈடுபட்டிருந்த நேரம் அவரைச் சந்திக்க ராணுவ உயர் அலுவலர்கள் வந்திருந்தனர்.
அதிபரோ, ராணுவத்தினரைக் கவனியாது, ஒரு புத்தகத்தில் ஆழ்ந்த கவனம் காட்டிப் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து, அவர் ராணுவ அலுவலர்களை நோக்கி, இது ஒரு நகைச்சுவைப் புத்தகம். இதில் ஒரு ருசிகரமான பகுதியைப் படிக்கிறேன். நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் என்றார்.
சொன்னபடியே படிக்கவும் தொடங்கினார். ராணுவத்தினருக்கோ தர்ம சங்கடமான நிலை. வந்த வேலையென்ன, இங்கே நகைச்சுவையைக் கேட்கவா வந்தோம் என ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே பொருமிக் கொண்டிருந்தனர். தங்களது நிலையைப் புரிந்து கொண்ட பின்னரும் -ங்கன் படிப்பதை நிறுத்தவில்லை.
அந்தப் பகுதியைப் படித்து முடித்ததும் “நீங்கள் யாருமே சிரிக்கவில்லையே ஏன் எனக் கேட்டார். அதிபதி அது கிடக்கட்டும். இரவும் பகலும் நாணப்படுகிறபாட்டில் நான் மட்டும் சிரிக்கவில்லையென்றால் செத்தே போயிருப்பேன். உங்களுக்கும் தேவையேதான் எனச் சொல்-யபடியே மேஜையி-ருந்து ஒரு தாளை எடுத்து படித்துக் காட்டினார். அதுதான் போரின் குறிக்கோளான அடிமை விடுதலைப் பிரகடனம் நீக்ரோ கருப்பின மக்களின் விடுதலை தானே அங்கும் நடக்கும் போரின் நோக்கம்.
ஒரு ராணுவ உயர் அதிகாரி உடனே சொன்னார். “அதிபர் அவர்களே! அந்த நகைச்சுவைப் புத்தகம், இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்திற்கு தூண்டுகோளாய் இருந்ததென்றால், நிச்சயம் அந்த நூலாசிரியரைக் கோயில் கட்டிக் கும்பிடத்தான் வேண்டும்” என்றாராம் மிகப் பணிவுடன். நகைச்சுவையின் வ-மையை விளக்க இதை விட வேறு சம்பவமே தேவையில்லை.
காலம் மாறினாலும், சில கருத்துக்கள் மாறுவதில்லை. எக்காலத்திற்கும் பொருந்துவதாய், சிந்திக்கத் தூண்டுவதாய் வாழ்க்கையை நெறிப்படுத்துவதாய் இருக்கக் கூடிய பல உண்மைகள் வரலாற்றில் உண்டு.
“பணப் பெட்டியில் தூங்குகிறது. பணக்காரன் மெத்தையில் தூங்குகிறான். ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான். இல்லாவிட்டால் வீதியில் ஏன் இவ்வளவு பிச்சைக்காரர்கள்.
“வாழவே முடியாது என்று பலர் நினைப்பது போல வாழ்க்கை அவ்வளவு மோசமானதல்ல. வாழ்வதே இன்பம் என்று பலர் நினைப்பது போல அத்தனை சுலபமானதல்ல”.
எப்போதுமே கீழே விழாமல் இருப்பதில் நமக்குப் பெருமையில்லை. நாம் விழக்கூடிய ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதிலேயே பெருமை இருக்கிறது.
“தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான் சமூகத்தில் முன்னேற முடியும்.
“வீரம் என்பது எதிர்ப்படும் அபாயத்தை அலட்சியப்படுத்துவதல்ல, தைரியமாய் எதிர்ப்பதுதான்.
கலைஞரின் கருத்துகளில் சில, இவையெல்லாம் வெறும் விஷயங்கள் அல்ல. தன் வாழ்க்கைப் பாதையில் அவர் கண்ட அனுபவங்களின் வெளிப்பாடே.
கலைஞரின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மையுண்டு. போர்க்களத்தில் சுழன்று வீசும் கனல் வீச்சு, காதல் களத்தில் கனி ரசமாய் சொட்டும் கவிதை மனம், அரசில் களத்தில் எதிரிகளைத் துவம்சம் செய்யும் சாணக்யத்தனம் என கலைஞரின் எழுத்தும் பேச்சும் வியக்கச் செய்வதாகும்.
அதில் வியப்பூட்டுவதும் மிக நுட்பமானதும் அவரது கண நேரத்தில் பின்ன-டும் பதில்கள். அதில் கொப்பளித்து நிற்கும் நகைச்சுவை உணர்வே. அவரது நகைச்சுவைத் துணுக்குகளெல்லாம் பிரசவத்தில் ஆழ்த்தும் தன்மை கொண்டது மட்டுமின்றி நயமான உண்மைகளையும் தெரிவு செய்யும் வல்லமை கொண்டதாகும்.
பத்தாண்டுகளுக்கு முன் புலனாய்வுப் பு-, பத்திரிகைச் செம்மல், மாவீரன் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களிடம் உரையாடும் போது கலைஞரின் சுவையான நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லும்போது, இதையே தொகுத்து ஒரு நூலாக வடிவமைக்கக்கூடாது எனத் தெரிவித்தார். அவர்களது அன்புக் கட்டளையை தொகுத்து அவரிடம் சமர்ப்பித்தேன். அதுவே 2007ல் முதல் தொகுப்பானது.
பின் பலர் அளித்த தகவல்களின் பேரில், சட்டப்பேரவை, அண்ணா அறிவாலயம் சென்று துணுக்குகளைத் தொகுத்தேன். இதுவே இரண்டாம் பகுதியானது.
இரு தொகுதிகளையும் படித்த, கேட்ட அன்பர்கள் பலர், கலைஞரின் வருகையின் போது தங்கள் பகுதிகளில் விளைந்த நகைச்சுவை நிகழ்வுகளை நேரிலும், அலைபேசி வழியாகவும், மடல்கள் மூலமாகவும் துணுக்குகளை அனுப்பி வைத்தனர். இதன் விளைவு மூன்று மற்றும் நான்கு பகுதிகளாயின.
அரசுப் பணியி-ருந்து விடுபட்டாலும் பணியாளர்களின் அமைப்புகளில் மாநிலப் பொறுப்புகளை ஏற்றிருந்த காலத்தில் எனக்கு உறுதுணையாகவிருந்த துறை அன்பவர்கள், சகோதரர்கள் எனது நிலைப்பாட்டையறிந்து கலைஞர் பற்றிய நகைச்சுவை அம்சங்களை அனுப்பிய வண்ணமிருந்தனர். இவற்றில் நாசே சிதம்பரம் (தென்காசி) இராசேந்திரன் (காஞ்சி) கந்தசாமி (குடந்தை) சந்திரசேகரன் (திருச்சி) பாலசுப்பிரமணியன் (காரைக்குடி) காசிநாதன் (சென்னை) காளீஸ்வரி (இராமநாதபுரம்) சோனு (ஆம்பூர்) ரவிக்குமார் (கேளம்பாக்கம்) துரைராஜ் (பெருங்களத்தூர்) ஆகியோர் இவ்விடயத்தில் உரிய ஒத்துழைப்பை எனக்கு வழங்கினார்கள்.
சோலை எழுத்தாளர், பாலசுப்பிரமணியன் சோழவந்தான் (சென்னை) கிருஷ்ணகுமார் (கலைஞர் தொலைக்காட்சி) இன்னும் பலரும் உதவியுள்ளனர். இதன் விளைவுதான் ஐந்தாம் பாகமாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக என் மீது பெரும் நம்பிக்கை வைத்து நான்கு பாகங்களை வெளிவரச் செய்த நெஞ்சுரம் கொண்ட நாயகன் அண்ணன் நக்கீரனார் அவர்கட்கு எனது நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
-கவிஞர் தெய்வச்சிலை

Additional information

Book Code

NB102

Author

கவிஞர் தெய்வச்சிலை

page

112

Category

Politics

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலைஞரின் நகைச்சுவை நயம் 5 | Kalignarin Nagaichuvai nayam 5”

Your email address will not be published. Required fields are marked *