Description
கலைஞரின் நகைச்சுவை நயம் என்ற நூ-ன் இரு பாகங்களுக்கும் முரசொ-த்த பாராட்டுக்கள் (நன்றி முரசொ- 03-06-2010)
முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மை உண்டு.
போர்க்களத்தில் சுழன்று வீசும் உணர்ச்சி வீச்சு, காதல் களத்தில் கனிரசமாய்ச் சொட்டும் கவிதை மணம், அரசியல் களத்தில் எதிரிகளின் தப்பு வாதங்களைத் தர்க்கத்தோடு தகர்த்தெறியும் சாதுர்யம் என்று -தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தும் பேச்சும் எண்ண எண்ண வியக்க வைப்பவை!
அப்படி கலைஞர் அவர்கள், நகைச்சுவையும் நயமும் ஆழ்ந்த பொருளும் உள்ள ஆயிரக் கணக்கான பதில்களைப் பளீர் பளீரென்று அளித்து அரசியல், கலை, இலக்கியக் களங்களில் அசத்தியிருக்கிறார்.
முதல்வர் கலைஞரின் இந்த பன்முகப் பேராற்றல் பளிச்சிட்ட நிகழ்வுகளையெல்லாம் கவிஞர் தெய்வச்சிலை அவர்கள், அண்ணா அறிவாலயம், சட்டமன்ற நூலகம், பல ஆண்டு கால “முரசொ-‘ இதழ்களைப் படித்து குறிப்பெடுத்து தொகுத்துத் தந்திருக்கிறார்.
தேர்ந்த சொற்பொழிவாளராக, செறிந்த எழுத்தாளராக, சிறந்த கவிஞராக, பெரும் அரசியல் அறிஞராக, செம்மொழித் தேர்ப்பாகனாக, தொலைநோக்குச் சிந்தனையாளராக, ஆட்சியியல் கலையில் அகிலமே வியந்து பார்க்கும் ஆளுமை மிக்கவராக விளங்கிடும் முத்தமிழறிஞர் – முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று -கவிஞர் தெய்வச்சிலை தொகுத்த “கலைஞரின் நகைச்சுவை நயம்” ( ) எனும் தலைப்பிலான நூ–ருந்து சிலவற்றை எடுத்து வெளியிடுவதில் -முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையான “முரசொ-‘ பேருவகையும் பெருமிதமும் கொள்கிறது.
மேலாக கவிஞர் தெய்வச்சிலை தொகுத்த கலைஞரின் நகைச்சுவை நயம் என்ற நூ–ருந்து சிலவற்றை எடுத்து வெளியிடுவதில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையான “முரசொ-” பேருவகையும் பெருமிதமும் கொள்கிறது என கலைஞர் பிறந்த நாளில், வெளிவந்த முரசொ-யில் (முழுபக்கம்) வெளிவந்துள்ளன. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலைஞரின் திசை நோக்கி எனது நன்றியினை சமர்பிக்கிறேன்.
வீரத்தால் மட்டுமே
அலெக்சாண்டருக்குப் பெருமை;
நெஞ்சுரத்தால் மட்டுமே;
நெப்போ-யனுக்குப் பெருமை;
வாள் வீச்சால் மட்டுமே
ஜூ-யஸ் சீசருக்குப் பெருமை;
புரட்சி எண்ணத்தால் மட்டுமே
லெனினுக்குப் பெருமை;
அமரக் காத-ன் அடையாளமான தாஜ்மஹாலால்
ஷாஜகானுக்குப் பெருமை;
அறிவியல் கண்டுபிடிப்புகளால் மட்டுமே;
எடிசனுக்குப் பெருமை;
அகிம்சை மார்க்கத்தை வழிகாட்டியதால்
அண்ணலுக்குப் பெருமை;
ஈரடிக் குறள் வள்ளுவனுக்குப் புகழ்;
ஒரு காப்பியத்தால் கம்பனுக்குப் புகழ்;
அப்படியென்றால்
எதனால் கலைஞருக்குப் பெருமை, புகழ்?
ஒன்றா… இரண்டா… பன்முகச் சிறப்பே…! மிகச் சிறந்த எழுத்தாளர், மிகச் சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த படைப்பாளர், மிகச் சிறந்த திரைக்கலைஞர், மிகச் சிறந்த நாடகக் கலைஞர், 50 ஆண்டு கால பேரவை உறுப்பினர், 5 முறை முதல்வர், அரசியல்வாதி, சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, போராட்டவாதி, மொழிக்காவலர், இனப் பாதுகாவலர், இந்திய அரசியலுக்கே வழிகாட்டி நிற்பவர்.
ஆயகலை 64 என்பதை மாற்றி, ஆயகலை 87 என்பதே சரி என நிரூபிக்கும் 87 வயதுக் கலைஞர் பலதுறைச் செம்மல். முத்தமிழ் வித்தகர், மூத்த பத்திரிகையாளர், நிர்வாகி, அரசியல் சாணக்யன், உழைப்பாளி, போராளி, தத்துவர் என அனைத்திற்கும் பெயர் பெற்றவர் இவரே.
உலகின் ஒப்பற்ற ஞானிகளை ஒரே இடத்தில் சந்திக்கலாம்.
அது கோபாலபுரம்; அந்த அவர் கலைஞர்!
கதகதப்பான கட்டுரைகள், காப்பகத்தில் கந்தகம் வைத்து நரம்புகளை முறுக்கிவிடும் முழக்கங்கள், பொய்யின் வேரறுக்கும் ஆயுத எழுத்து; அனல் கக்கும் பேருரைகளின் அணிவகுப்பு; இவைதான் கலைஞரின் மறுபதிப்பாகும்.
இன்னும் அவர்தம் பேச்சில் சிரிக்கும் சக்தி படைத்தது மனித இனம் என்ற வாக்குக்கேற்ப நகைச்சுவையுணர்வும் காலந்தோறும் மிளிர்ந்து ஆர்ப்பரித்து நிற்பதையும் நாம் காணலாம்.
கலை மணம் வீசாத நெஞ்சில் கருணை தவழாது. கருணை தவழாத நெஞ்சில் மன்னிக்கும் பக்குவம் உருவாகாது. கலை, கருணை, மன்னிப்பு; இந்த மூன்று குணங்களும் ஒரு சேர வாய்த்திருந்தால் மட்டுமே நகைச்சுவை நடனமாடும். இவற்றின் மொத்த உருவம்தான் கலைஞர்.
நகைச்சுவை என்பது அவரது வாழ்வின் ஓர் அங்கம்,. இயல்பான நடவடிக்கை, மரத்தின் தளிர்களைப் போல மேகத்தின் துளிகளைப் போல; கட-ன் அலைகளைப் போல இயல்பாய் எழும் இன்பச் சுவையாகும்.
நடந்தால் ஊர்வலம் என்பார்கள். நின்றால் மாநாடு என வர்ணிப்பதுண்டு. உறக்கம் தவிர்த்து அவர் சொல்லும் ஒவ்வொன்றும் சுவை மிகுந்தது. அதில் எப்படியும் நகைச்சுவை மிளிரும். நகைச்சுவைக்காக அவர் அறை போட்டுச் சிந்திப்பதில்லை எனக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டது தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகும்.
பல்வேறு பொதுமேடைகளில், மாநாடுகளில், கவியரங்குகளில், மணவிழாக்களில், சட்டப்பேரவை நிகழ்வுகளில், அன்றாட உரையாடல்களில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களின் வெகு இயல்பான -ஆனால் கணப்பொழுதில் வெடித்தெழும்பிய நகைச்சுவைத் துணுக்குகளை “கலைஞரின் நகைச்சுவை நயம்’ என்ற பெயரில் இரண்டு மாலைகள் (இரு பாகங்கள்) தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
வாசக அன்பர்கள் பலர் அதனைப் பாராட்டி வாழ்த்துக்களையும் நல்கியிருந்தனர்.
ஒரு சிலர், இதுபோன்ற துணுக்குகளை எனக்கு நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனையொட்டி மாநில முழுவதிலுமுள்ள எனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் ஊர்களுக்கு கலைஞர் வருகை தந்தபோது அங்கே சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளைத் தெரிவிக்க வேண்டினேன்.
பலரும் தாங்கள் அறிந்த செய்தியினை தெரிவித்தனர். அற்புதமான துணுக்குகள், மலைத்துப் போனேன். மீண்டும் ஒரு வாசனை மாலையை (மூன்றாம் பாகம்) தொகுத்துள்ளேன்.
மீண்டும் பவ்யமாக சொல்கிறேன். முதல் இரண்டு மாலைகளைப் போல இந்த மாலையைப் பொறுத்தும், நான் ஒரு பூக்கடை ஊழியரேதான்.
சிதறிக் கிடந்த, வாடாமல், வதைபடாமல் இருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட பலவித வாசனை மிகுந்த உதிரிப் பூக்களால் தொகுக்கப்பட்டதென்பதால், முந்தைய இரு மாலைகளையும் விஞ்சி, அற்புதமான வாசனையை இதில் அனுபவிக்கலாம் எனத் தெரிவிப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி கொள்கிறேன்.
முந்தைய காலங்களைப் போலவே புதையல், முரசொ- மற்றும் தேவையான ஆவணங்களை அன்புடன் அளித்து உதவிய அறிவாலய நூலகப் பொறுப்பாளர் அண்ணன் சுந்தர்ராசன் அவர்களுக்கும், அவரது உதவியாளர் அவர்கட்கும் எனது நன்றிகள். இந்த நூலுக்கு அடித்தளமிட்ட கவிஞர் கருணாதாசன், திருகோதண்டராமன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த மாலைக் கடையின் பொறுப்பாளரைப் பற்றியும் சொல்-யாக வேண்டும். அவர், புகழின் புகழான மாவீரன் அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களேதான்.
முதல் நூலைத் தொகுத்து வெளியிடச் செய்தபின், அதனை அவர்களிடம் தெரிவித்தபோதெல்லாம், அப்படியே என் மீது சாற்றி, இதன் நாயகன் அண்ணன்தான் என என்னை உச்சிமோந்து மெச்சியபோதெல்லாம், ஆயிரமாயிரம் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது போல் ஆனந்தம் கொண்டேன்.
ஒருநாள் இரவு மணி 11.30. எனது செல்ஃபோன் ஒ-த்தது. அழைத்தது மாவீரன். (செல்ஃபோனில் இப்படித்தான் பதிவு செய்துள்ளேன்). “வாழ்த்துக்கள்’ என்றார். “நன்றி என்றேன்”. “என்னவென்று கேட்காமல் “நன்றி’ சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து வந்தால், அது நல்ல சேதியாகத்தான் இருக்கும்” என்றேன். “ஆம். நெல்லை தி.மு.க. மாநாட்டில் கலைஞர் நகைச்சுவை நயத்திற்கு அமோக வரவேற்பு, அடுத்த பாகத்தை ஆரம்பியுங்கள்” என்றார்.
எனக்கான ஊக்கத்தையும் பாராட்டையும் நாள்தோறும் அவர் அளித்து வருவதால், இந்த மூன்றாம் பாகத்தைத் தொகுப்பதில் நான் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ள வில்லை.
அண்ணன் மாவீரன் அவர்களும் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிக்கவர். கலை+கனிவு+மன்னிப்பு இவைகளின் மொத்த உருவம் அவரும்தான். ஆயிரமாயிரம் வீரத் தழும்புகளையும், சோதனைகளையும், வெற்றிகளையும் ஒருசேர சமநோக்கில் பாவித்து, தனது கொள்கையி-ருந்து சிறிதும் நழுவாமல், இதயத்தை இறுக்கமாக்காது இலகுவாக்கி ஈர உணர்வோடு இயல்பாக அதனை உரைப்பதும் அண்ணன் அவர்களிடமும் உண்டு.
பல பல நிகழ்வுகள். ஒருமுறை, எனது இல்லத்து புதுமனை புகுவிழா அவரது தலைமையில்தான் நடந்தேறியது. அவர் இருந்த மூன்று மணி நேரமும், கலகலப்பாகவே இருந்தது. எல்லாமே ஜோக்ஸ், மதிய உணவு. எல்லோர் மத்தியிலும் அவரும் அமர்ந்து விருந்தைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது “அண்ணனுக்கு வேறு என்ன வேண்டும்” எனக் கேட்டேன். “ரூபாய் ஒரு லட்சம் வேண்டும் கொடுப்பீங்களா” -கேட்கவா வேண்டும் சிரிப்புக்கு இதுபோன்று ஏராளம்.
அந்த நெஞ்சுரங்கொண்ட பொடா நாயகனிட மிருந்து செய்தி வந்தால் “அண்ணே நேற்று/இன்று கலைஞர் சொல்-யுள்ளதைக் கவனித்தீர்களா? உங்கள் நகைச்சுவைப் புத்தகத்திற்கு இதோ ஒரு துணுக்கு’ என்பார். அவர் காதுக்கு எட்டிய மறுவிநாடியே எனக்கு அனுப்பி வைப்பதும் அவரது இயல்பான நடவடிக்கை என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்து, மீண்டும் எனது நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.
எனக்கு இடைவிடாது வழிகாட்டி வரும் மூத்த பத்திரிகையாளர் அன்புச் சகோதரர் திருமிகு.மா.முருகன் அவர்கட்கும் எனது நன்றிகள்.
Reviews
There are no reviews yet.