Description
அறிஞர் அண்ணா 100
சபீதா ஜோசப்
1). 100-க்கு 100 வாங்கிய அண்ணா
அண்ணா முத-ல் கல்வி கற்கச் சேர்ந்ததும் பச்சையப்பன் ஆரம்பப் பாடசாலை, அவர் பட்டம் பெற்றதும் பச்சையப்பன் கல்லூரிதான்.
ஆரம்பப் பாடசாலையில் அவரைச் சேர்க்கும்போது அவருக்குச் சடை பின்னிப் பூச்சூட்டித்தான் அனுப்புவார்கள்.
அவரைப் பெண் போலவே பாவித்து, தலை சீவுவது மட்டுமல்ல, அவரை அழைக்கும் போது கூட, “வாடா, போடா’ என்று கூறாமல், “வாம்மா, போம்மா’ என்றே வீட்டிலுள்ளோர் அழைப்பார்கள்.
பள்ளிக்கூடத்துப் பையன்கள் எல்லாம் கிராப்புத் தலையோடு இருக்கத் தான் மட்டும் “சடை பின்னிக் கொண்டு இருப்பதையும் கண்டு அண்ணாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பள்ளிக்கூடம் விட்டு அவர் வரும்போது அவரை அழைத்துச் செல்ல வந்த தொத்தாவிடம் இதைச் சொல்ல நினைத்தார் அண்ணா.
“தொத்தா எத்தனை மார்க் வாங்கியிருக்கேன் பாரு’ என்று சிலேட்டை நீட்டினார் அண்ணா.
“நீயே சொல்லு, எத்தனை மார்க்கு, கண்ணு?’ என்றார் தொத்தா -“நூற்றுக்கு நூறு’ என்றார் அண்ணா பெருமையாக. “அப்படியா! என் ராஜா எல்லாத்திலேயும் கெட்டிக்காரன், என்று முத்தம் கொடுத்துப் பாராட்டினார். இதுதான் சமயம் என்று, “தொத்தா’ அந்தப் பசங்களைப் பாரு. எல்லாரும் கிராப் வைச்சுக்கிட்டு இருக்காங்க. எனக்கு மட்டும் இதுவா?’ என்று சடையை இழுத்துக் காட்டினார் அண்ணா.
ஒரு நிமிடம் திகைத்துப் பிறகு பரவசமடைந்த தொத்தா, “கண்ணு. நாளைக்கே உனக்கு கிராப் வெட்டிவிடச் சொல்றேன்’ என்று கூறிவிட்டு, “சின்ன வயசாயிருந்தாலும் என் துரை எவ்வளவு பக்குவமாகத் தனது கஷ்டத்தைச் சொல்கிறான்’ என்று பூரித்துப் போனார்.





நடிகரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் (உரிமையியல
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இலங்கையி
தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக "தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத
2026 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்வது,
Reviews
There are no reviews yet.