Description
முத்தமிழறிஞர் கலைஞர்… சகலகலா வல்லவர். அரசியலோடு… கதை, கவிதை, கட்டுரை, இலக்கியம், நாடகம், திரைப்படம், திரைப்பாடல் என சகல படைப்புத் துறையிலும் எவரும் பதிக்காத அளவிற்கு… தனது முத்திரையைப் பதித்துக்கொண்டிருப்பவர். முதுமையைக் கூட தனது சுறுசுறுப்பான உழைப்பால்… தோற்கடித்து வருகிற ஜாம்பவான் அவர்.
அதோடு சமயோஜிதமும் நகைச்சுவையும் கலைஞரின் ரத்தத்தில் ஊறிப்போனவை. குறிப்பாக சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்… தன்னையும்… தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்… சமூகத்தையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்… முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான்.
பொதுக்கூட்ட மேடையாகட்டும்… சட்டமன்றமாகட்டும்… பத்திரிகையாளர் சந்திப்பாகட்டும் …தனி உரையாடலாகத்தான் இருக்கட்டும்… கலைஞரின் பேச்சில்… மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை நயம் சுடர்விடும். அது அத்தனைபேரையும் விலா எலும்பு விடுபட சிரிக்கவைக்கும். எக்குத்தப்பாய் கேள்வி கேட்டு மடக்க நினைப்பவர்கள் கூட… திகைத்து மகிழும் வகையில் கலைஞரின் நகைச்சுவை இங்கித எல்லைகளைக் கடக்காமல் இருக்கும்.
இத்தகைய கலைஞரின் பேச்சில் தெறித்துவிழும் நகைச்சுவைப் பரல்களை.. ஏற்கனவே ‘கலைஞரின் நகைச்சுவை நயம்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்து தந்து தமிழ்வாசகர்களை மகிழவைத்திருக்கிறார் அண்ணன் கவிஞர் தெய்வச்சிலை. எழுத்தாற்றலும் பேச்சாற்றலும்… பீறிட்டு எழும் கவிதையாற்றலும் கொண்டவர் அண்ணன் தெய்வச்சிலையாவார். இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக இருந்தவர். கலைஞரின் இலக்கியத்தில் தோய்ந்து… அவர்பால் மனதைப் பறிகொடுத்தவர். இன்று முழுக்க முழுக்க தி.மு.க. அனுதாபியாக மாறிவிட்டவர்.
இத்தகைய கவிஞர் தெய்வச்சிலையின் கடுமையான உழைப்பிலும் தொகுப்பிலும்… ’கலைஞரின் நகைச்சுவை நயம்’ மூன்று பாகங்களாக வெளிவந்தது. இப்போது நான்காம் பாகமாக… அழகிய நூல் வடிவெடுத்து உங்கள் கைகளில் இப்போது தவழ்ந்துகொண்டிருக்கிறது. கலைஞரின் நகைச்சுவை மலர்களைப் பறித்து… அழகிய மாலைகளாகத் தொகுத்துத் தரும் அண்ணன் தெய்வச்சிலையை நெஞ்சாரப் பாராட்டி… கலைஞரின் நகைச்சுவை நயம் நான்காம் தொகுப்பிற்கும் தமிழுலகம் தனது பேராதரவைத் தரவேண்டும் என்று இந்த நேரத்தில் வேண்டுகிறேன்.
இந்தத் தொகுப்பு அழகிய நூலாக உருவாக… ஒத்துழைப்பைக் கொடுத்த அத்தனை பேருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.





கரூர் பிரச்சார நிகழ்வில் செப்டம்பர் 27 அன்று 41 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட் டோர் காயமடைந
இன்றைய பஞ்சாங்கம் 29-10-2025, ஐப்பசி 12, புதன்கிழமை, சப்தமி திதி காலை 09.23 வரை பின்பு வளர்பிறை அஷ்
நடிகர் விஜய்யின் த.வெ.க.வை முன்னிறுத்தி தி.மு.க.வை மிரட்டிக்கொண்டி ருந்த காங்கிரஸ் கட்சி திடீரென்ற
"ஹலோ தலைவரே, இந்த அடைமழை நேரத்திலும் நடிகர் விஜய், கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும
Reviews
There are no reviews yet.