Description
ஜூபிடரில் “ராஜகுமாரி’ படத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். பலத்த எதிர்ப்புகளைச் சமாளித்தே அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் ஒரு முரடன் வேஷம். “”அதில் நீங்கதான் அந்த முரடனா நடிக்கணும். அப்போதுதான் அது பொருத்தமாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. மறுநாள் அவர் ஸ்டுடியோவுக்குச் சென்று, என்னையே அந்த வேடத்திற்குப் போடும் படி சிபாரிசு செய்தார். “”உங்களைக் கதாநாயகனாகப் போட்டுப் படம் எடுப்பது இதுவே முதல் தடவை. அப்படியிருக்க அவரைப் போய் நீங்கள் இப்படிச் சிபாரிசு செய்யலாமா? பெரிய ஆளாகப் போட்டால் நன்றாக இருக்கும்” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
Reviews
There are no reviews yet.