10 பொருத்தங்கள் போதுமா | 10 Porutham Podhuma

65.00

Category:

Description

ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.
வாழ்வாங்கு வாழ்ந்து வளங்கள் எல்லாம் சூழ்ந்து ஓர் ஆணும் பெண்ணும் நீடித்து நிறைவாழ்வு பெறுவதற்கு, ஜோதிட ரீதியில் சில விதிமுறைகளை முன்னோர்கள் மொழிந்துள்ளார்கள்.
ஊசி முனையில் நடப்பது போன்ற நுட்பமான முறை அது.
அறிந்தவர்கள் மட்டுமே அந்த விதிமுறைகளை செயல் முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது போலப் பஞ்சாங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் ஜோதிடர்கள் என்று தீர்மானித்துவிட முடியாது.
பஞ்சாங்கங்கüல் வரிசையாகப் பத்துப் பொருத்தங்களுக்குக் குறிப்புக்கள் உண்டு. அதைப் பார்த்து விரலைவிட்டு எண்ணி, “இந்த வரன் பொருந்தும், இந்த வரன் பொருந்தாது’ என்று மிக எüதாக முடிவெடுத்து விடுவோரும் உண்டு.
என்னை மன்னிக்க வேண்டும்.
அவர்களைக் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
பத்துப் பொருத்தங்களை வரையறுப்பது என்பது, வெறும் கூட்டல் கழித்தல் முறையாகாது.
பொருத்தம் பார்ப்போருக்கு ஜோதிட ஞானம் அமைந்திருக்க வேண்டும். கிரகங்களைப் பற்றிய அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
நீண்ட காலப் பயிரை வாழவைப்பதற்குப் பத்துப் பொருத்தங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், ஜாதகங்கüல் உட்புகுந்து சூட்சுமமானப் பொருத்தங்களையும் எடைபோட்டுப் பார்க்க வேண்டும். பிரிக்கப்படாமலும், பிரிக்கப்பட வேண்டியவர்கள் சேர்க்கப்படாமலும் இருக்க வழிபிறக்கும்.
உண்மையாகப் பொருத்தம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும்; பொருத்தம் இல்லாதவர்கள் இணைக்கப்படாமல் இருப்பதற்கும் சற்று விரிவாகவே ஒரு ஜோதிட நூலை இயற்றித்தர வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வெகு நாட்களாக உண்டு.
இந்தப் புத்தகத்தை ஒரு முறைக்குப் பலமுறை படித்து ஜாதகங்களைக் கையில் வைத்துக் கொண்டு அனுபவ ரீதியாகவும் பயிற்சி பெற்றால், திருமணப் பொருத்தம் தீர்மானிக்கப்படுவதில் யாதொரு குற்றமும் உண்டாகாமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும், சுயமாகப் பார்த்து ஒரு முடிவுக்கு வரப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடும் இந்நூல் மிக எüய நடையில் இயற்றப்பட்டுள்ளது.
என் எண்ணம் ஈடேறி அனைவரும் பயனடைய அன்னை பராசக்தியை வழிபடுகிறேன்.
அன்பன்
வித்வான் வே.லட்சுமணன்

Additional information

Book Code

NB196

Author

வித்வான் வே. லட்சுமணன்

Pages

80

Category

Spirituality

Reviews

There are no reviews yet.

Be the first to review “10 பொருத்தங்கள் போதுமா | 10 Porutham Podhuma”

Your email address will not be published. Required fields are marked *