வித விதமான சாதம் குழம்பு பொரியல் வகைகள் | Vitha Vithamana Satham Kulambu Poriyal Vagaigal

100.00

Category:

Description

இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின்
எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அனைவரும்
அறிந்த ஒன்று. பணிநிமித்தம் காரணமாக அவர்களுக்கு சமையல்
கலையைத் தாயிடமிருந்து கற்றுக்கொள்ள போதிய நேரமில்லை
என்பதே உண்மை.
ஆகையால், பெண்கள் மத்தியில் சமையல் கலை பற்றிய
நூல்கள் அண்மைக் காலமாக பெரும் வரவேற்பை பெற்று
வருகின்றன. அதுவும், இன்றைய தலைமுறை பெண்களுக்குச்
சமையல் குறிப்புகள் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.
இதனைக் கவனித்திற்கொண்ட இந்நூலாசிரியர் தேன்மொழி
தேவி, சாதம்-குழம்பு-பொரியல் போன்றவற்றை விதவிதமாக
சமைத்து சாப்பிட, நிறைய டிப்ஸ்களை அள்ளித்தந்துள்ளார்
இந்நூ-ல்.
அவற்றில், கோஸ் சாதம், காரட் சாதம், காப்சிகம் சாதம்,
காளான் சாதம், நெல்-க்காய் சாதம், குருமா குழம்பு, பூண்டு
குழம்பு, வத்தக் குழம்பு வாழைக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு
பொரியல், வெந்தயக் கீரை பொரியல், பரங்கிக்காய் பொரியல்
என இன்னும் பல வெரைட்டிகள் இதில் அடங்கும்.
இந்த சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.