Description
ஜாதி மத பேதங்கள் இல்லாத இடமாக பள்ளி, கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு படிக்கும் மாணவர்கள் உலக வரலாற்றை படித்து புரிந்துகொள்வதோடு இன்னொன்றையும் படிக்க வேண்டியது அவசியம் என்கிறார் காந்தியடிகள். அவர் சொல்வதை நீங்களே படியுங்களேன்:
“”மாணவர்களாகிய உங்களிடம் நான் முதன் முதலாகவும், மனப்பூர்வமாகவும் கேட்டுக் கொள்வது இதுதான்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உள்ளத்தையே துருவிப்பார்த்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நான் அப்படிச் சொல்லியவை உங்களுக்கு உண்மை என்று புரிந்து கொள்ளும்போது, உங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையை முறைபடுத்திக் கொள்ளவும் ஆரம்பிப்பீர்கள்.
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தாமல், உள்ளத்தூய்மை அடைந்துவிட இயலாது. எனவே நீங்கள் எதைச் செய்கின்றபோதும் இறைவனிடம் கொண்டுள்ள பற்றுதலை மட்டும் இழந்து விடாதீர்கள்.
குர்ஆனையும், கிறிஸ்துவின் போதனையையும் நீங்கள் படிப்பதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் கீதையையும் இந்து மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்டு என்கிறார் தேசபிதா.
ஆசிரியர்கள் கவனத்திற்கு
பாடம் போதிக்கும் ஆசிரியர் தாங்கள் போதிக்கும் முறையில் கொள்ள வேண்டிய நடைமுறை நியாயங்களை காந்தியடிகள் இப்படிச் சொல்கிறார்:
“”உங்கள் பாடத் திட்டத்தில் சமயக் கல்விக்கும் இடம் இருக்கிறது. இது சரியான காரியமே. சமயக் கல்வியை சிறுவர்களுக்கு சிறந்த முறையில் போதிப்பது சம்பந்தமாகப் பல பையன்களை வைத்து நான் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். புத்தகத்தின் மூலம் போதிப்பது சிறிது உதவியாய் இருக்கிறது. எனினும் அது ஒன்றினால் மட்டும் பயனில்லை என்பதை நான் கண்டேன்.
ஆசிரியர்களும் சமய வாழ்க்கை வாழ்ந்து சமயத்தை போதிப்பதே சரியான நெறி என்று கண்டேன். ஆசிரியர்களின் சொந்த வாழ்க்கையிலிருந்து அதிகமாகக் கிரகித்துக் கொள்கிறார்களேயன்றி ஆசிரியர்கள் படித்துக்காட்டும் புத்தகங்களிலிருந்தோ, அல்லது அவர்கள் புரிகிற பிரசங்கங்களிலிருந்தோ சிறுவர்கள் அதிகமாகக் கிரகித்துக் கொள்வதில்லை.





சிதம்பரம் அருகே பால் வாங்க நடந்து சென்ற மூதாட்டியிடம் 40 கிராம் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச்
சென்னையில் காரை ஏற்றி இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக பிரமுகர் அம்மன் ரகுராமன் தனது முகநூல் பதிவில், ‘அஇஅதிமுகவின்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் கடந்த மே 29ஆம் தேதியன்று, இரண்டு சக்கர வாக
Reviews
There are no reviews yet.