பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பாகம் 4 | Pannaipuram Express Bagam 4

110.00

Category:

Description

கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.