Description
‘பேசிப் பேசியே நாட்டைப் பிடித்த கட்சி” என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை சொல்வார்கள். பேச்சு என்றால் ஏனோதானோ வென்றோ, தொண தொணவென்றோ பேசவில்லை. வெறும் பேச்சு பேசவில்லை, வெட்டிப் பேச்சு பேசவில்லை. தி.மு.க.வின் மேடைப்பேச்சு அத்தனையும் தொலைநோக்குப் பேச்சு, கொள்கை மூச்சு, லட்சிய வீச்சு. தந்தை பெரியார், ஏ.டி.பன்னீர் செல்வம், பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் போன்றவர்கள் அரசியல் மேடைகளிலும் சரி, சட்டமன்ற, நாடாளு மன்றங்களிலும் சரி திறம்பட பேசுவதிலும் சுவைபட பேசுவதிலும் மிகப்பெரும் ஆற்றலாளர்கள்.
அதேபோல் மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ., தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் தற்போது பேராசிரியர் சாலமன் பாப்பையா, கு.ஞானசம்பந்தன், நடிகர் சிவக்குமார் போன்றவர்கள் இலக்கிய மேடைகளிலும் பட்டிமன்ற மேடை களிலும் பேசி ஜொ-ப்பவர்கள், ஜெயிப்பவர்கள்.
அண்ணன் தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள ‘வரலாறு கண்டவர் களின் வார்த்தை ஜாலங்கள்’ (இரண்டு பாகங்கள்) என்ற இந்த நூ-ல் தமிழகத் தலைவர்கள் தொடங்கி, உலகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ண ஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தெய்வச்சிலை நமது நக்கீரன் பதிப்பகத்துக்கு நன்கு பரிச்சயமானவர். எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்த அவர் ‘கலைஞரின் நகைச்சுவை நய’த்தை நான்கு பாகங்களாக நக்கீரன் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார். அந்த நான்கு தொகுப்பில் உள்ளவை அத்தனையும் சிறப்பு. 30-க்கும் மேற்பட்ட நூல்களை நம் பதிப்பகத்திற்காக எழுதியுள்ளார்.
இந்த ‘வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்’ இரு பாகங்களிலும் உள்ளவை அனைத்தும் அற்புதமானவையே. சிரிக்க, சிந்திக்க மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது பல அறிஞர்களின் வார்த்தை ஜாலங்கள்.
தமிழ் வாசகப் பெருமக்களின் பேராதரவை வேண்டி இந்த இரு பாகங்களையும் வெளியிடுகிறோம்.





பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் ஒரு
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் சென்னைக்கு நீர் வழங்கும் எரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ
மருமகனுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு ஒரு பெண்ணின் தலைமுடியை வெட்டி, ஆடைகளை
மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
Reviews
There are no reviews yet.