மகாத்மா மாணவர்களுக்கு சொன்னது | Mahatma manavargalukku sonnathu

60.00

Category:

Description

ஜாதி மத பேதங்கள் இல்லாத இடமாக பள்ளி, கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு படிக்கும் மாணவர்கள் உலக வரலாற்றை படித்து புரிந்துகொள்வதோடு இன்னொன்றையும் படிக்க வேண்டியது அவசியம் என்கிறார் காந்தியடிகள். அவர் சொல்வதை நீங்களே படியுங்களேன்:
“”மாணவர்களாகிய உங்களிடம் நான் முதன் முதலாகவும், மனப்பூர்வமாகவும் கேட்டுக் கொள்வது இதுதான்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உள்ளத்தையே துருவிப்பார்த்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நான் அப்படிச் சொல்லியவை உங்களுக்கு உண்மை என்று புரிந்து கொள்ளும்போது, உங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையை முறைபடுத்திக் கொள்ளவும் ஆரம்பிப்பீர்கள்.
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தாமல், உள்ளத்தூய்மை அடைந்துவிட இயலாது. எனவே நீங்கள் எதைச் செய்கின்றபோதும் இறைவனிடம் கொண்டுள்ள பற்றுதலை மட்டும் இழந்து விடாதீர்கள்.
குர்ஆனையும், கிறிஸ்துவின் போதனையையும் நீங்கள் படிப்பதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் கீதையையும் இந்து மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்டு என்கிறார் தேசபிதா.

ஆசிரியர்கள் கவனத்திற்கு
பாடம் போதிக்கும் ஆசிரியர் தாங்கள் போதிக்கும் முறையில் கொள்ள வேண்டிய நடைமுறை நியாயங்களை காந்தியடிகள் இப்படிச் சொல்கிறார்:
“”உங்கள் பாடத் திட்டத்தில் சமயக் கல்விக்கும் இடம் இருக்கிறது. இது சரியான காரியமே. சமயக் கல்வியை சிறுவர்களுக்கு சிறந்த முறையில் போதிப்பது சம்பந்தமாகப் பல பையன்களை வைத்து நான் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். புத்தகத்தின் மூலம் போதிப்பது சிறிது உதவியாய் இருக்கிறது. எனினும் அது ஒன்றினால் மட்டும் பயனில்லை என்பதை நான் கண்டேன்.
ஆசிரியர்களும் சமய வாழ்க்கை வாழ்ந்து சமயத்தை போதிப்பதே சரியான நெறி என்று கண்டேன். ஆசிரியர்களின் சொந்த வாழ்க்கையிலிருந்து அதிகமாகக் கிரகித்துக் கொள்கிறார்களேயன்றி ஆசிரியர்கள் படித்துக்காட்டும் புத்தகங்களிலிருந்தோ, அல்லது அவர்கள் புரிகிற பிரசங்கங்களிலிருந்தோ சிறுவர்கள் அதிகமாகக் கிரகித்துக் கொள்வதில்லை.

Additional information

Book Code

NB116

Author

சபீதா ஜோசப்

Pages

80

Category

Education

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகாத்மா மாணவர்களுக்கு சொன்னது | Mahatma manavargalukku sonnathu”

Your email address will not be published. Required fields are marked *