சதாம் சகாப்தம் | Saddam Sagaptham

65.00

Out of stock

Category:

Description

தன் அதிரடி நடவடிக்கைகளால் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய சதாம் உசேன்…
இப்போது உலகையே தன் முடிவிற்காக “உச்’ கொட்ட வைத்திருக்கிறார். இது ஒரு வரலாற்று விசித்திரம்.
சதாம் நல்லவரா; கெட்டவரா? அவரால் ஈராக்கிற்கு கிடைத்தது பலனா; பாதகமா? அவர் சர்வாதிகாரியா; சாமான்யரா? அவர் வரமா; சாபமா? என்பது போன்ற விவாதங்கüல் நாம் இறங்க விரும்பவில்லை.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஒரு முரட்டுச் சிறுவனாக வளர்ந்து… தன் முரட்டுத்தனங்களையே வீரமாக மாற்றிக்கொண்டு, அந்த வீரத்தின் மூலமே ராணுவத் தளபதி அந்தஸ்தைப் பெற்று, பின்னர் ஈராக்கின் வல்லமை மிகுந்த அதிபராகவே உட்கார்ந்து… வரலாற்றின் ஆச்சரியக்குறியாகவே திகழ்ந்தவர் சதாம். இதை அவரது எதிரிகள்கூட ஏற்றுக்கொள்வார்கள்.
அதிபர் பதவி மூலம் அவருக்குக் கிடைத்த பலமே பின்னாüல் பலவீனமாக மாறியது. போர்க்களங்கüல் வீரதீரமாக சடுகுடு ஆடிய சதாம் யுத்த தந்திரங்களைக் கற்றதோடு, குடிமக்கüன் மனதைக் கற்றிருக்க வேண்டும். அண்டை நாடுகüன் மனநிலையைக் கற்றிருக்க வேண்டும். வல்லாண்மை சக்தியாக விளங்கும் அமெரிக்கா, ஈராக்கிற்குள் எந்தெந்த வகைகüலெல்லாம் மூக்கை நுழைக்கும் என அவதானிக்கக் கற்றிருக்க வேண்டும்.
இதையெல்லாம் கற்காததால்… சொந்த நாட்டிற்குள்ளேயே தனக்கெதிரான குரல்களை அவர் கேட்க நேர்ந்தது. அண்டை நாடுகüன் வெறுப்பையும் பாராமுகத்தையும் சந்திக்க நேர்ந்தது. ஒருகாலத்தில் தோüல் கைபோட்டு தோழமை கொண்டாடிய வஞ்சக அமெரிக்காவாலேயே நிர்மூலத்தைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் வந்தது.
பாவம் சதாம். அவரே அவரை அந்திமத்தை நோக்கி நகர்த்தி வந்துவிட்டார். அமெரிக்காவின் ஆசைப்படி அதன் சூழ்ச்சி வட்டத்திற்குள் தன்னைக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டார்.
எது எப்படியோ? சதாமின் வாள் வீரம், அமெரிக்க வஞ்சகத்தின் முன் தோற்றுப் போய்விட்டது. சிகரங்களை நோக்கி எப்படி விரைவாக அடியெடுத்து வைப்பது என்பதற்கு உதாரணமாக விளங்கிய அதே சதாம்…
சிகரத்தில் இருப்பவர்கள் எப்படி எப்படியெல்லாம் சரியக்கூடாது என்பதற்கும் உதாரணமாகிவிட்டார். அவரது வாழ்க்கை, நாம் படித்தறிய வேண்டிய பாடம். ஒருகாலத்தில் நெப்போ-யனையும் அலெக்ஸாண்டரையும் பார்ப்பதுபோல் இளைஞர்கüன் உலகம் சதாமை ஒரு மகாவீரனாகப் பார்த்து புருவம் உயர்த்தியது.
அதே இளைஞர்கள் பரிசோதனைச் சாலையில் சிக்கிய ஒரு பரிதாப எ-யைப்போல… அமெரிக்கப் படைகüடம் சிக்கிய சதாமைப் பார்த்தனர். இதை காலத்தின் வினோதம் என்பதா? வரலாற்றின் ஏடாகூடம் என்பதா?
சதாம் வாழ்ந்த வாழ்க்கையை சரி என்று நாம் வாதாட வரவில்லை. ஆனால் அவருக்கு நேர்ந்த முடிவு சரியானதல்ல என்பதே நம் எண்ணம்.
ஒரு அந்நியதேசத்தின் விருப்பத்தால் அவருக்கு திணிக்கப்பட்ட மரணம் கொடுமையானது.
மறுபடி உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. உயிரை மீண்டும் உருவாக்க முடியாது.
மரண தண்டனை என்பதே அநாகரிகத்தின் உச்சம். ஆதிவாசிகால அசிங்கம். தவறுகளைத் திருத்தும் வல்லமை அழிவிற்கு ஏது?
தவறு செய்பவர்கள் திருந்துவதற்குக்கூட வாய்ப்புத் தராமல் அவர்களுக்கு மரண தண்டனை தருவது மகா கொடூரம்.
“அவசரத்தில் தீர்ப்பு. ஆத்திரத்தில் அநீதி என இந்த தண்டனையை விமர்சித்த மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர், “க-ங்கத்துப் போரிலே கணக்கற்ற உயிர்களைக் கொன்ற பிறகுதானே அசோகர் பௌத்தரானதாக வரலாறு. அந்த அசோகச் சின்னம்தானே இந்தியாவின் கீர்த்தியைப் பாடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் வைக்கிற வாதம் சாதாரணமானதல்ல.
உயிர்க்கொலைகளுக்குக் காரணமான அசோகருக்கு எந்த வகையிலாவது உடனடியாக மரணம் நிகழ்ந்திருக்குமானால் கருணை கசியும் அசோகரை வரலாறால் பார்த்திருக்க முடியாது? தவறிழைத்தவர்கள் கடைசிவரை தவறிழைப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
குற்றச் செயல்கüல் ஈடுபட்ட ஒருவர்தான் “வால்மீகி முனிவர்’ எனும் பரிணாமத்திற்கு வந்து ராமகாவியம் படைத்தார். ஆக திருந்தக் கிடைக்கிற வாய்ப்புகளே போர்க்கள வெறியரை புனித அசோகராகவும் குற்றங்கüலேயே கொற்றம் நடத்திய ஒருவரை வால்மீகி முனிவராகவும் ஆக்குகிறது எனில்… இந்தத் திருந்தும் வாய்ப்பை ஏன் சதாமுக்குத் தந்திருக்கக்கூடாது.
சதாமை கொல்லவேண்டும் என ஒரு தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு அதன்பின் விசாரணை நாடகத்தை அரங்கேற்றி சதாமைக் கொன்றிருப்பது, அமெரிக்கா செய்த உலக அயோக்கியத்தனம். இந்தக் கொடூரக் கொலைக்கு அமெரிக்கா காலத்திடம் பதில் சொல்-யே ஆகவேண்டிய தருணம் விரைவில் வரும். வரவேண்டும். நக்கீரனைப் பொறுத்தவரை சதாம் அமெரிக்கப் படைகüடம் சிக்கியபோதும் சரி, அவருக்கு மரண தண்டனை தரப்பட்ட போதும் சரி… மரணதண்டனை எனும் கொலை வைபவம் அரங்கேற்றப் பட்டபோதும் சரி, மற்ற எந்தப் பத்திரிகைகளைவிடவும் பாக்தாத்தி-ருந்தே தகவல்களைத் திரட்டி அதை அப்பட்டமாகவும் அதிரடியாகவும் தந்திருக்கிறது என்பதை நாம் மார்தட்டியே சொல்லலாம்.
நக்கீரனைவிட சதாம் விவகாரத்தை வேறு எந்த ஊடகமும் இவ்வளவு விரிவாக தந்ததில்லை என நம் நக்கீரன் வாசகர்களே சவால் விட்டுச் சொல்லுகிற அளவிற்கு இதற்காக உழைப்பைத் தந்து வியர்வையை சிந்தியிருக்கிறோம். குறிப்பாக நக்கீரனின் முதன்மைத் துணையாசிரியரான தம்பி லெனின், மிக நேர்த்தியாக கவனமாக தகவல்களைத் திரட்டி நக்கீரன் வாசகர்களுக்கு கட்டுரையாகத் தந்தார். அவரது முயற்சி பாராட்டுக்குரியது. இதனை நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை தந்தவர் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன்.
அதேபோல் தம்பி குருவின் நேர்த்தியான வழிகாட்ட-ன்படி புத்தகத்தை அழகாக வடிவமைத்த தம்பி கணேசன் உள்üட்ட இந்த நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
சதாமின் இறுதி நாட்கள் ஒரு துக்க காவியத்தின் கண்ணீர்ப் பக்கங்களாக காட்சியüக்கிறது. அவரது வரலாற்றின் அந்திமப் பகுதி… பல்வேறு எண்ணங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கை பற்றிய நிதர்சனத் தத்துவங்களையும் நமக்குள் ஏற்படுத்தும்.
எனவே – தமிழுலகிற்கு அவரது அந்திம நாட்கüன் அனுபவங்களை அவர் முற்றுப்புள்üயாக்கப்பட்ட நொடிகளை சதாமின் மறைவு ஏற்படுத்திய தாக்கங்களை அப்படியே அப்பட்டமான ஒரு வரலாற்று ஆவணமாக நக்கீரன் இங்கே தொகுத்துத் தருகிறது. இந்த நூல்-
வரலாற்றின் வெüச்ச வீதிக்குள் வந்து… திடீரென காணாமல் போன ஒரு அரிய மனிதனின் கடைசிப் பக்கம்.
நக்கீரன் குழும நூல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் தமிழ் மக்கள் இந்த நூலுக்கும் தங்கள் மகத்தான ஆதரவைத் தரவேண்டும். இதுவே எங்கள் ஆசை; எதிர்பார்ப்பு

Additional information

Book Code

NB148

Author

தமிழ்நாடன் – லெனின்

Pages

96

Category

History

Reviews

There are no reviews yet.

Be the first to review “சதாம் சகாப்தம் | Saddam Sagaptham”

Your email address will not be published. Required fields are marked *