Description
படித்தவர்கள் இரு கண்களை உடையவர்கள், கல்லாதவர்கள் இரு புண்ணுடையவர்கள்” இதைவிட சற்று சூடு சுரணை வருவது போல் வள்ளுவரைத் தவிர யாரால் சொல்ல முடியும். எனவே படி… உலகத்தை உன் அறிவுக் கண்களால் திறந்து பார், அதைவிட்டுப் படிக்காமல் கண் இருந்தும் குருடனாக இருக்காதே என்று அழுத்தமாய் வள்ளுவர் சொல்கிறார்.
தென் கோடியில் ராமநாதபுரத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த அப்துல்கலாம் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக, இந்திய மக்கள் நேசிக்கும் குடியரசு தலைவராக இருப்பதற்குக் காரணம் அவர் கற்ற கல்வியும் அவர் வாழ்ந்து காட்டிய விதமும்தான்.
எனவே இனிவரும் தமிழ் மொழி பேசும் குழந்தை ஒவ்வொன்றும் படிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், தானும் வளர்ந்து இந்த நாட்டிற்காகவும் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தால் செயல்பட்டவர் நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர்.
“பாரத ரத்னா’ அப்துல் கலாம் அவர்கள் கல்வியின் சிறப்பை, அதன் பயன்பாட்டை கலாம் பல மேடைகளில். பல கேள்வி, பதில்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அரிய வாக்கியங்கள்தான் உங்கள் முன் இருக்கும் இவை. உங்களை நேர்படுத்தவும்; நிமிர்ந்து நிற்கவும்; உழைத்து உயரவும்; செம்மைப்படுத்தவும் உதவும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கற்பிப்பதைவிட வேறொரு மேலான வெகுமதி அளிக்க முடியாது”-என்றார் நபிகள் நாயகம்,
“கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு’-என்பது சான்றோர் வாக்கு
நன்றாக படித்தால் படைப்பாற்றல் வரும், படைப்பாற்றல் வளர்ந்தால் பேச்சாற்றல் வரும்,
கல்வி அறிவு வளர வளர மூடநம்பிக்கைகள் குறையும், எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நிறையும்,
நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைக்கும், வங்கிகள் கடனுதவி செய்யும்,
படிப்பு என்பது அரசாங்க வேலை பெறுவதற்காக மட்டுமல்ல; தொழில் முனைவோராக உயர்ந்து மனிதனாக வாழ்வதற்கு எல்லாருக்கும் கல்வி அறிவு மிக அவசியம்,
நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் கல்வித்தரத்தை குறிக்கிறது.
இப்படி பல அரிய வி‘யங்களை நாளைய மாணவர் சமுதாயம் படிப்பிலும், வாழ்விலும் சிறந்து விளங்க அப்துல்கலாம் சொல்கிறார்.
படியுங்கள் படிப்பு தரும் சிறப்பை அறியுங்கள்.
-அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், அறிவுக்கடல் அப்துல் கலாம் அவர்களுக்கும் நன்றி.
என்றும் நட்புடன்
சபீதா ஜோசப்.





தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க
தமிழ்த் திரையில் உச்ச நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது ஜனநாயகன் படம் வருகின்ற 9ஆம் தேதி வெளியாகு
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22ஆவது அமைச்சரவைக் கூட்டம்
அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க
Reviews
There are no reviews yet.