Description
நம் பாரத தேசத்தில் படிக்காத மேதைகள் பலர் இருந்து மக்களுக்காக வெகுசிறப்பாய் உழைத்திருக் கிறார்கள். இதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை என்றாலும், அந்த படிக்காத மேதைகள் தங்களை தேச சேவையில் ஈடுபடுத்திக் கொண்ட பிறகு… கல்வியின் தேவையுணர்ந்து பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்கள். ஆக, படிக்காத அந்த மேதைகளும் படித்தவர் களே!
கல்வி என்பது அவ்வளவு முக்கியமானது. கல்விச்செல்வம் பெறாத ஒரு தேசத்தில், எந்த விழிப்புணர்ச்சியும் இருக்காது. கல்வியறிவு பெற்றவர்களால்தான் தேசம் பெருமைக்குரிய தேசமாக மாறும். அந்த வகையில் இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக தேசத்தின் வருங்காலத் தூண்கள் மாணவர்களே!
மாணவர் நினைத்தால் நடத்திக் காட்டலாம். அப்படிப்பட்ட மாணவ-மணிகளின் துணிவையும் அறிவையும் ஆற்றலையும் பெருக்கெடுத்து ஓடும் அவர்களின் சக்தியையும் ஒழுங்குபடுத்தி நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டியது தலைவர்களின் பொறுப்பு. அரசின் பொறுப்பு.
“படிச்சிட்டு இருக்கிறவங்கதானே’ என பல சமயம் மாணவர்கள் அலட்சியப்படுத்தப்படுவதும் உண்டு.
“வருங்காலத் தூண்கள் என மாணவர்களுக்கு அடை மொழி மட்டும் கொடுத்தால் போதுமா? எதிர்கால இந்தியாவின் சக்தியை தீர்மானிக்கப் போகிற மாணவர்களின் மன உணர்வுகளைத் தெரியவேண்டும். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்’ என்பதை கொள்கையாகவே கொண்டவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.
மாணவர்களின் வளர்ச்சியில்தான்… “முன்னேற்றம் அடைந்த இந்தியா’ என்ற லட்சியத் தை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் அப்துல்கலாம்.
அணு விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்து மத்திய அரசின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக பதவியேற்றதி-ருந்தே… ஒருபுறம் சென்னை அண்ணா பொறியியற் கல்லூரியில் பேராசிரியர் பணிசெய்து வந்த அப்துல்கலாம் நாடுநெடுக பயணம் மேற்கொண்டு லட்சக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார்.
“ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதா? வேண்டாமா?’ என அப்துல்கலாம் தனக்குள் கேள்வி யெழுப்பிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு பள்ளி மாணவியின் ஆழ்ந்த புத்திசா-த்தனமான பதில்தான் அப்துல் கலாமிற்குள் எழுந்த கேள்விக்கு விடையாக அமைந்ததாம்.
அந்தச் சம்பவம் என்ன?
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள அனந்தாலயா என்கிற பள்ளிக்கு அப்துல்கலாம் சென்றிருந்தார். அப்போது மாணவர்களுக்கும் அவருக்கும் இடையே கலந்துரையாடல் நடந்தது.
அந்த உரையாட-ன்போது “நம்முடைய எதிரி யார்?’ என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். பலரும் பலவிதமான பதில்களைச் சொன்னார்கள்.
+2 படித்துக்கொண்டிருக்கும் சினிகல் என்ற மாணவி “வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும்தான் நமது எதிரி’ என பதில் சொன்னார்.
பரந்து விரிந்த இந்த பாரதத்தின் பரம எதிரியை ஒரு தொலைநோக்குப் பார்வையோடு அடையாளம் காட்டிய அம் மாணவியின் பதில் அப்துல்கலாமிற்கு ரொம்பவே பிடித்துப் போனது.
அதன் பிறகுதான் ஜனாதிபதியாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும் என்ற உறுதி அவருக்கு ஏற்பட்டதாம்.
மாணவ சமுதாயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் அப்துல்கலாம் அவர்கள், தன் நம்பிக்கையை வெளிக்காட்டும் விதமாக மாணவ சமுதாயத்திற்கு மரியாதை செய்யும்விதமாக, தான் ஜனாதிபதியாக பதவியேற்றபோது நாடெங்கிலும் இருந்து நூறு மாணவர்களை சிறப்புப் பார்வை யாளர்களாக அழைத்து கௌரவப்படுத்தினார்.
இந்த பதவியேற்பு விழாவில் அப்துல்கலாமின் கவனத்தை தன் புத்திசா-த்தனத்தால் ஈர்த்த மாணவி சினிகலும் கலந்து கொண்டார். தமிழகத்திற்கு தமிழக மாணவ சமுதாயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னை அடையாறில் உள்ள வனவாணி பள்ளியில் படிக்கும் வெங்கட்ராமன், அனிதா, வாசு தேவன், ரூப்கேலா சௌத்ரி ஆகிய நான்கு மாணவ- மாணவிகளும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டு பங்கேற்றனர்.
“அரசியல் என்றாலே பயந்துகொண்டிருந்த எனக்கு கலாமை பார்த்தபின் அரசியல்வாதிகளில் நல்லவர்கள் உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டேன்” என மாணவர் வெங்கட்ராமன் பெருமிதப்பட்டுச் சொன்னார்.
மாணவர் சமுதாயத்தின் மீது அப்துல்கலாம் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் மாணவர் சமுதாயம் திருப்பிச் செலுத்திய மரியாதைதான் வெங்கட் ராமனின் வார்த்தைகள்.
இந்திய சரித்திரத்திலேயே ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவிற்கு மாணவர்கள் அழைக்கப்பட்டது கலாம் காலத்தில்தான்.
சரித்திரத்தில் முதன்முதலாக நடைபெற்ற இந்தச் சம்பவம் எந்த விளைவை மாணவர்களுக்கு ஏற்படுத்திவிடப் போகிறது?
இப்படி ஒரு கேள்வி எழும்பட்சத்தில் வனவாணி பள்ளியின் முதல்வர் சொல்-யிருந்த கருத்தே மிகச்சரியான பதிலாக இருக்கும்.
“ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் மாணவ மணிகள் பங்கேற்றது என் நெஞ்சை நெகிழ்த்திவிட்டது. இத்தகைய தொரு உயர்ந்த நிலையை நாமும் அடைய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவ மாணவியும் உணர்கின்ற சூழ்நிலையை, நல்ல நம்பிக்கையை உருவாக்கிய அப்துல்கலாம் அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ஜனாதிபதி பதவி யேற்பு விழாவில் மாணவர்கள் பங்கேற்றது மாணவர் களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஒரு நல்ல விழிப் புணர்வை தரக்கூடிய நிகழ்ச்சியாகும்” என தன் எண்ணத்தை அப்போது வெளியிட்டிருந்தார் பள்ளி முதல்வர்.
இப்படி மாணவச் செல்வங்கள் மீது மாறா நேசம் கொண்ட கொண்ட கலாம், மாணவர்களின் உயர்வுக்காக சொன்ன கருத்துரைகளை, சிந்தனைகளை, உறுதிமொழிகளை, மாணவச் செல்வங்களுக்கு தொகுத்தளித்திருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.