Description
ஒரு சிறிய இடைவெüக்குப் பிறகு… சுகமான சூத்திரங்களோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்தச் சூத்திரங்களுக்குச் சொந்தக்காரன் நானல்ல; மன்மத முனிவன் வாத்சாயணன்.
ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங் களுக்கு முன்… வாத்சாயணன் படைத்த வசீகரக் காதல் வேதம் தான் காமசூத்ரா.
காமசூத்ரா என்ற பெயரைக் கேட்டதுமே பலர் பதட்டப் பரபரப்பு அடைவார்கள். முகத்தில் வெட்க ரேகை படர நகம் கடிப்பார்கள். ஐயோ அபச்சாரம் அபச்சாரம் இதை முத-ல் பரணில் தூக்கிப் போடு என இன்னும் சிலர் சங்கட சஞ்சலத்தோடு கூப்பாடு போடுவார்கள்.
இதற்கெல்லாம் எது காரணம்? அறியாமை.
காமசூத்ராவை ஏதோ படிக்கக் கூடாத ஆபாசக் களஞ்சியம் என்றுதான் நம்மில் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது நாடு கடத்தப்பட வேண்டிய நம்பிக்கை. முழுமையான மூட நம்பிக்கை.
நமது அகவாழ்வை நெறிப்படுத்த, மிகுந்த பொறுப்புணர்வோடு ஓதப்பட்ட பிரம்ம வேதம்தான் காமசூத்ரா. இதை சுகமான சூத்திரங் களாக்கி எழுத்து வடிவில் இந்த பூமிக்குத் தந்தவன் வாத்சாயணன்.
ஸ்திதி எனப்படும் வாழ்க்கைக்கு சுபஸ்திதி, அசுபஸ்திதி என இரண்டு முகங்கள் இருப்பதாக நமது வேதங்கள் சொல்கின்றன. சுபஸ்திதி என்பது இன்பமான வாழ்க்கை. அசுபஸ்திதி என்பது துன்பமான வாழ்க்கை. சுபஸ்திதியாய் அமைய வேண்டிய வாழ்க்கை, பலருக்கு ஏன் அசுபஸ்திதியாய் மாறி விடுகிறது? என்று கேட்டால்… இதற்கும் நமது வேதங்கள் பதில் சொல்கின்றன.
தர்மம் எனப்படும் அறநெறியும் அர்த்தம் எனப்படும் பொருள் நெறியும் காமம் எனப்படும் இன்பநெறியும் தான் மனிதர்கüன் முப்பரிமாணம். இவை சுய ஒழுக்கம் கலந்ததாக இல்லாவிட்டால்… ஸ்திதி சுபஸ்திதியாகிவிடும் என்கின்றன வேதங்கüன் ஞானக்குரல்.
அறம், பொருள் இன்பத்தை ஏன் சுய ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும்?
அறம் என்கிற தர்மத்தில் ஒழுக்கமில்லை எனில் அது அதர்மமாகி… நம் வாழ்வில் துன்ப வெய்யிலை வீச வைத்து விடும்.
பொருள் என்கிற அர்த்தத்தில் ஒழுக்கமில்லை என்றால்… அது அனர்த்தமாகி… நம் வாழ்வில் இருள் சுரக்க வைத்து விடும்.
இந்த அறநெறி, பொருள் நெறி போலத்தான் இன்பநெறி. இதில் நாம் சுய ஒழுக்கத்தைப் பின்பற்றவில்லை எனில்… நம் வாழ்வில் கடல் பூகம்பத்தையே ஏற்படுத்தி விடும். ஒட்டுமொத்தத்தில் நம் இல்லறமே இருள் அறமாகி விடும்.
எனவே தான் நமது ரிஷிகளும் ஞானிகளும் வேதங்கüன் மூலம் அறம் பொருள் இன்பம் பற்றியே அக்கறை பொங்க அட்வைஸ் செய்கிறார்கள். இத்தகைய ஞானிகüல் ஒருவனான நம் வாத்சாயணன், காமம் பற்றிய தெüவை ஏற்படுத்தவும், காதல் பற்றிய புரிதலை உண்டாக்கவும் சந்ததி விருத்திக்கான நெறிமுறைகளைப் போதிக்கவும் சுகமான சூத்திரங்களால் காமசூத்ராவைப் படைத்திருக்கிறான்.
முறையான காமம் எது? முறையற்ற காமம் எது? யார் மீது யார் காமம் கொள்ளலாம்? யார் மீது யார் காமம் கொள்ளக் கூடாது என்பது போன்ற… வழிகாட்டல் குறிப்புகளையும் வாரி வழங்குகிறான் வாத்சாயணன்.
இது திகைக்க வைக்கும் வேதம் மட்டுமல்ல. பல திசைகளைக் கொண்ட வேதம். நம் இந்திய பூமியி-ருந்து புறப்பட்ட நாதம்.
இந்த நேரத்தில் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடந்த நவம்பர் 22 முதல் மூன்று நாட்கள், “ஆசிய பசுபிக் செக்ஸாலஜி மாநாடு’ மும்பையில் நடந்தது.
இதில் மும்பையைச் சேர்ந்த பிரபல பா-யல் நிபுணரான பிரகாஷ் கோத்தாரி, காமசூத்ராவைப் பற்றி ஒருநாள் சிறப்புரை நிகழ்த்தினார்.
“காமசூத்ரா புராதனமானது மட்டுமல்ல; நவீனமானது’ என்ற வசீகர வாதத்தை அவர் வைத்த போது… உலக ஆய்வாளர்கள் பலரும் வாத்சாயணனைப் புருவம் உயர்த்தி வியந்தனர்.
அப்போது, இத்தா-யி-ருந்து வந்திருந்த பெண் மருத்துவரான அலசாண்ட்ரா கிரஸியோட்டினி எழுந்து, “உங்கள் இந்தியாதான் காமசூத்ரா மூலம், உலகிற்கு முதன்முத-ல் காமத்தைப் போதித்தது என்பதை உள்ளப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன். அதேசமயம், இத்தகைய காமசூத்ராவை… உங்கள் இந்தியாவில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?” என அதிரடியாய் ஒரு கேள்வியை எழுப்பினார். இதைக் கேட்டு சபையே, சில நிமிடங்கள் நிசப்தத்தில் உறைந்து விட்டது.
அலசாண்ட்ராவின் கேள்விக்கு எவராலுமே திருப்தியான பதிலைத் தரமுடியாது. காரணம்.
நம் சமூகம் காமத்தின் மீது கொண்டிருக்கிற வெட்கம், தயக்கம். இதை நமக்கு ஏற்படுத்தியவர்கள் வெள்ளையர்கள்.
வெள்ளைக்காரர்கள், நம் மண்ணில் தங்களது கருப்புக் காலடிச் சுவடுகளை பதிப்பதற்கு முன்பு வரை நம் சமூகம், காமத்தை வாழ்க்கையின் ஒரு கூறாகத்தான் சகஜமாப் பார்த்து வந்தது.
பா-யல் எண்ணங்கள், இலக்கியங்களாய், சிற்பங்களாய், ஓவியங்களாய், விவாதங்களாய், பகிரங்கமாகவே இங்கு பகிரப்பட்டு வந்தது. வெள்ளைக்காரர்கள் தான் மேற்கத்திய நாடுகள் செக்ஸ் மீது கொண்டிருந்த தயக்கத்தையும் வெட்கத்தையும் இங்கு இறக்குமதி செய்தார்கள்.
இந்த வெட்கமும் தயக்கமும் தான் செக்ஸ் பற்றிய அறியாமையை வளர்த்தது. இந்த அறியாமை தான் செக்ஸ் பிரச்சினைகளை சாகுபடி செய்து… செக்ஸ் குற்றங்களையும் உரம் போட்டு வளர்த்தது. இதுவே இளைஞர்களையும் இளைஞிகளையும் பயந்து பயந்து எல்லை மீற வைத்தது. பல்வேறு நோய்களுக்கும் இங்கே வரவேற்புத் தோரணம் கட்டியது.
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்தாலோ அல்லது முழுமையாகத் தெரியாமல் போனாலோ பிரச்சினை இல்லை. ஆனால் அதுபற்றி தெரிந்தும் தெரியாமலும் அரைகுறையாய் இருப்பதுதான் ஆபத்தானது என்பார்கள். பா-யல் தெüவைப் பொறுத்தவரை நம் சமூகம், இந்த இரண்டும் கெட்டான் நிலையில் தான் இருக்கிறது.
எனவே- இந்த நிலை மாற செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை இந்த சமூகத்திற்கு இதயசுத்தியோடு நாம் தொடர்ந்து ஏற்படுத்தியாக வேண்டும். இதற்கு உதவியாகத்தான் மகா முனிவன் வாத்சாயணனை உங்கüடம் நான் அழைத்து வருகிறேன்.
பல்லாயிரம் வருடத்துக்கும் முந்தைய வேதகாலத்தில் அவன் எழுதி வைத்த மன்மதச் சூத்திரங்கள்… இன்று எந்த அளவிற்கு பொருந்தும் என்பதை நாம்… அவனிடமே இன்றைய விஞ்ஞானம் தந்திருக்கிற சிந்தனைகளோடு ஒப்பிட்டு விசாரிக்கலாம்.
வெட்கங்களையும் தயக்கங்களையும் உதறிவிட்டு என்னோடு வாருங்கள். நாம் சுகமாய் வாழ்வதற்குத் தேவையான சூத்திரங்களோடு வாத்சாயணன் காத்திருக்கிறான்.
என்றென்றும் உங்கள்
டாக்டர் நாராயணரெட்டி
வாருங்கள். நம்மைக் கடந்துபோன யுகங்களுக்குள் ஒரு மினி சுற்றுலா போய் வரலாம்.
இதோ காலஎந்திரம். எல் லோருமாக வந்து “ஆன்ட்டி க்ளாக் வைஸில்’ சுழற்றுங்கள். ம்… அப்படித் தான்… மெல்ல மெல்லச் சுழற்றுங்கள்.
இதோ காலம் மெல்ல மெல்லப் பின்னோக்கி நகர்கிறது.
நிகழ்காலம் சரவரவென பின்னோக்கி இழுபடும் ஓசை கேட்கிறது. நம் சமூகத்தின் கடந்த காலங்கள் நிகழ்காலமாய் தரிசனம் தரத்தொடங்குகிறது.
அதோ… அங்கே பாருங்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக் காலம் தென்படுகிறதா? நம் கோட்டைக் கொத்தளங்களுக்குள் வெள்ளைக்கார சீமான்களும் சீமாட்டிகளும் இடையில் கை கோர்த்து மெல்-ய இசைப் பின்னணியோடும் மதுக்கோப்பை களோடும் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். பைபிள் வெüச்சத்தில் அங்கங்கே சர்ச்சுகள் முளைத்திருக்கின்றன.
அதோ தெருக்கüல், “பாரத மாதாகி ஜே’ என உரத்து முழங்கும் மக்கள் மீது… சிப்பாய்கüன் லத்திகள் பாய்ந்து கொடூர கூக்குரல்களையும் ரத்தக்கறைகளையும் ஏற்படுத்திக்கொண்டி ருக்கிறது. மனது கனத்துப்போகிறதா? உங்கள் கண்கüல் நீர் முத்துக்கள் கருக்கொள்கிறதா?
மனதை தேற்றிக்கொண்டு இன்னும் கொஞ்சம் ரிவர்ஸ் கீர் போட்டு பூமியைச் சுழற்றுங்கள். அதோ நாயக்க மன்னர்கள், மராட்டிய சிவாஜிகள் கடந்து போகிறார்கள். இதோ பாருங்கள்… மொகல்தேச சக்கரவர்த்திகள் ஆட்சி பரிபாலனங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. அகில்புகையும் சாம்பிராணிப்புகையும் குர்ரான் வாசகங்களும் மசூதிகüல் மணக்கிறது. இடையிடையே சகோதர யுத்தங்கள்… ரத்தங்கள்…
இன்னும் வேகமாய் சுழலட்டும் கால எந்திரம். அதோ கோட்டைக் கொத்தளங்கüன் மேல் “வில், பு-, கயல்’ பொறித்த கொடிகள் படபடக்கின்றன. தேவார, திருவாசக, திருமந்திர ஓசைகள் திருக்கோயில்கü-ருந்து வழிந்து வருகின்றன. கூடவே வாள்முனைகள் உராயும் சப்தங்களும் கேட்கின்றன.
பல்லவர்கள், சாளுக்கியர்கள், களப்பிரர்கள் என பலரின் சாம்ராஜ்யங்கள் எதிர்ப்படுகின்றன. அதைத்தாண்டி நாம்போக… அதோ ஔவைகள், கபிலர்கள், பரணர்கள்… என செம்மாந்த புலவர்கüன் திருக்கூட்டம் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டது. அட சங்ககாலம்.
பாரி, அதியமான் போன்ற கடைஏழு வள்ளல்கüன் புரவி பூட்டிய தேர்கள்… தெருக்கüல் சந்தோஷப் புழுதி கிளப்பியபடி ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் அகிலும் துகிலும் முத்துக்களும் நாவாய்கள் மூலம் கிரேக்கத்துக்கும் பாரசீகம் போன்ற தேசங்களுக்கும் பரபரப்பாக ஏற்றுமதியாகிக்கொண்டிருப்பது தெரிகிறதா?
Reviews
There are no reviews yet.