Description
“எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்’’ – என்பது மகாத்மா காந்தியின் வாக்கு.
“உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்-ல் அதைத் தேய்த்துப் பார்’ – என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு.
இவைகளை உறுதிமொழியாகக் கொண்டு தமது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் சபீதாஜோசப்.
எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்துக்கு ஒரு மெசேஜ். இதுதான் இவரது பாணி.
1989-இல் பத்திரிகையாளராக வாழ்வை தொடங்கினார். தமிழகத்தின் பல முன்னணி இதழ்கள் மூலம் அறியப்பட்டவர். பல ஆண்டு அனுபவத்தை எழுத்தாக்க “நக்கீரன்’ வாசல் திறந்து விட்டது.
2006-இல் எழுத்தாளராக “பெரியார் 100′, “காமராஜர் 100′, “அண்ணா 100′, “கலைஞர் 100′, “எம்.ஜி.ஆர். 100′, “சிவாஜி 100′, “கண்ணதாசன் 100′, “கலைவாணர் 100′, “ரஜினி 100′, “கமல் 100′ என்று நூறுகளில் தமது படைப்பு பணியைத் தொடர்ந்தார்.
2006-இல் பத்து நூல்கள்.
2007-இல் இருபது நூல்கள்
2008-இல் 22 நூல்கள்
2009-ல் இன்னும் பல அரிய நூல்கள்
என நான்கு ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கும் எழுத்தாளர் சபீதா ஜோசப்பை விரைவில் சதம் அடிக்க நக்கீரன் பதிப்பகம் வாழ்த்துகிறது.
யுத்த களத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், இவர்களை கொலை செய்தல், விளைநிலங்களைப் பாழாக்கல், பழ (தரும்)மரங்களை வெட்டல், மிருகங்களை கொல்லல், வீடுகளுக்கு நெருப்பிடல் முதலியவற்றைச் செய்யக்கூடாது. என்று நபி பெருமானார் கூறியுள்ளார்.
போரில் தோல்வியடைந்தோரிடமும் போர்க் கைதி களிடமும் நபிகள் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார். அக்கால அரேபியர் போர்க் கைதிகளைக் கொன்று விடுவார்கள். ஆனால் நபிகள் காலத்தில் போர்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைவர் என்பவர் தமது சாதாரண சிப்பாய்களுடைய இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும். அகழ் போரின் போதும் அகழ் தோண்டும் போதும் நபி பெருமானார் ஒரு சாதாரண சிப்பாய் போல மண் தோண்டினார். மண் சுமந்தார். எப்போதும் போர்க்களத்தில் முன்னேறிச் செல்வார் நபிகள் நாயகம். ஹஸ்ரத் அலி போன்ற பெரு வீரர்கள் பின்னால் நிற்பார்கள்.
அரேபியாவின் அரசராக அவர் இருந்தபொழுது எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். எல்லா வேலைகளையும் தமது கையாலேயே செய்வது வழக்கம். தாம் செய்யக்கூடிய வேலையைப் பிறர் செய்யும்படி அனுமதிப்பதே கிடையாது.
ஒரு நாள் ஒரு யூதர் விருந்தாளியாக வந்திருந்தார். நபிகள் பெருமான் அவருக்கு வயிறு நிறைய ஆகாரம் கொடுத்ததோடு அல்லாமல் அவர் தங்கி களைப்பாறும் பொட்டு தமது அறையையும் படுக்கை விரிப்பையும் கொடுத்து உதவினார்.
ஆனால் அந்த யூதன் அந்த இரவில் அந்த அறையில் மலம் கழித்து அசுத்தப்படுத்திவிட்டு அங்கிருந்து அதிகாலை ஓடிப்போனான். ஆனால் அவன் மறதியாக தனது வாளை அறையில் வைத்து விட்டான். எனவே அதை எடுப்பதற்காக மறுபடியும் வந்தான்.
அங்கே அவன் மலம் கழித்த அறையை, நபி பெருமானார் சுத்தம் செய்து கொண்டிருப்பதை கண்டு, தம் தவறுக்கு வருந்தினான். நபிகளிடம் மன்னிப்புக் கோரினான். நபி பெருமானார் அவனை மன்னித்து அனுப்பினார்.
Reviews
There are no reviews yet.